பள்ளி மாணவர் கழுத்து நெரித்து கொலை

புவனேஸ்வர்: ஒடிஷாவில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி, கோடைக்கால வகுப்பில் படித்து வந்த, 15 வயது மாணவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சக மாணவர்கள் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஒடிஷாவின் கியோன்ஜ்ஹார் நகரில், தங்கும் வசதி உடைய தனியார் பள்ளி ஒன்றில், ஜலாதர் மஹாநத் என்ற மாணவருடன், பல மாணவர்கள் கோடை விடுமுறை நாட்களில் தங்கி படித்து வந்தனர்.
ஹாஸ்டலில் தங்கியிருந்த அவர்களில், தங்கர்பாடா கிராமத்தைச் சேர்ந்த மாணவரும் படித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவில், மாணவர்களுக்குள் எழுந்த சிறு விவாதத்தில், சக மாணவர்கள் மூவர், ஜலாதர் மஹாநத் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
முதலில், சாதாரணமாக இறந்து விட்டார் என நினைத்த உறவினர்கள், பின், அந்த சிறுவன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததை அறிந்தனர்.
அதையடுத்து, அந்த மாணவரின் உறவினர் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜலாதரை கழுத்தை நெரித்துக் கொன்ற மாணவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மூவரும் சிறார்கள் என்பதால், அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி