ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு இன்று முடிகிறது.

நாளை முதல் கோடை விடுமுறை துவங்குகிறது. விடுமுறை முடிந்து, ஜூன் 2ம் தேதி திங்கள் கிழமை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் திறக்கப்படும்.

Advertisement