ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

1

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கிராமத்தில் உள்ள, ஆர்.எம்.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 12 மற்றும், 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கடந்த, 20ம் தேதி நடந்த விழாவுக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஆர்.எம்.கே., கல்வி குழும நிறுவன தலைவருமான முனிரத்தினம் தலைமை வகித்தார். 2023 - 24ம் ஆண்டுகளில், பல்கலை தர வரிசையில் இடம் பெற்ற, 54 பேர் உட்பட, 797 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், சென்னை நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா, பல்கலை தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு, 6.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கி பேசுகையில், ''இன்றைய தொழில்முறை சூழலை திறம்பட எதிர்கொள்ள, தொடர் கல்வி மற்றும் ஒழுக்க நெறியை கடைப்பிடிக்க வேண்டும்.

''நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும், பட்டம் பெற்ற மாணவர்கள் பங்களிக்க வேண்டும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், ஆர்.எம்.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இயக்குநர் ஜோதி நாயுடு, துணைத் தலைவர் கிஷோர், செயலர் யலமஞ்சி பிரதீப், துணைத்தலைவர் துர்காதேவி, மேலாண்மை உறுப்பினர் சவுமியா கிஷோர், கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார், ஆராய்ச்சி துறை புல முதல்வர் ராமர், சிவராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.எம்.கே. கல்விக்குழும ஆலோசகர்களான பழனிசாமி, பிச்சாண்டி, மனோகரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.

ஆர்.எம்.கே., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், பல்கலை தர வரிசையில் இடம் பிடித்த மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கிய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவாஸ்தவா. உடன், இடமிருந்து: புல முதல்வர் சிவராமன், ஆராய்ச்சி துறை புல முதல்வர் கே.ராமர், முதல்வர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் கிஷோர், முன்னாள் துணைவேந்தர் பழனிசாமி, கல்லுாரி நிறுவனர் மற்றும் தலைவர் முனிரத்தினம், தமிழ்நாடு கனிம கழக முன்னாள் இயக்குநர் மனோகரன், கல்லுாரி இயக்குநர் ஜோதி நாயுடு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிச்சாண்டி.

Advertisement