காவல் துறை மானிய கோரிக்கையில் போலீசாரின் எதிர்பார்ப்பு இடம் பெறுமா?

சென்னை: சட்டசபையில், காவல் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பதவி உயர்வுக்கான ஆண்டுகள் குறைப்பு, பயணப்படி உயர்வு, காவலர் குடியிருப்புகள் அதிகரிப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட தங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து, அரசுக்கு போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர்.
கடிதத்தில், போலீசார் கூறியிருப்பதாவது: ஒரே கல்வி தகுதி அடிப்படையில், அரசு பணியில் சேர்ந்த மற்ற துறை ஊழியர்களுக்கும், எங்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் உள்ளன; அவற்றை களைய வேண்டும்
பணிச்சுமை காரணமாக, போலீசாரின் உடல் நலன் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. இதை தவிர்க்க, காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முழுதையும் நிரப்ப வேண்டும்
அவசர கால பணியாக, 24 மணி நேரமும் பணிபுரியும் போலீசாருக்கு, ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும்
காவலர் பற்றாக்குறை காரணமாக, போலீசாருக்கு வார ஓய்வு முறையாக தரப்படுவது இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்
மாநிலம் முழுதும் காவலர்களின் குடியிருப்புகளை அதிகரிக்க வேண்டும்
பணியின் போது இறக்கும் போலீசாரின் குடும்பத்தினருக்கு, ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்
எல்லா காவல் நிலையங்களுக்கும் ரோந்து பணிக்கு நான்கு சக்கர வாகனங்கள் வழங்க வேண்டும்
இரண்டாம் நிலை காவலர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் தான், முதல் நிலை காவலர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தலைமை காவலர் என்ற நிலையை அடைய, 15 ஆண்டுகளும், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு பெற, 25 ஆண்டுகள் வரை பணி செய்ய வேண்டி உள்ளது.
இதனால், இன்ஸ்பெக்டர் என்ற நிலையை எட்ட முடியாமல் ஓய்வு பெற்று விடுகிறோம். எனவே, பதவி உயர்வுக்கான ஆண்டுகளையாவது குறைக்க வேண்டும்
எரிபொருள் பயணப்படியை, 25 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்
அதிகாரிகளால், போலீசாருக்கு வழங்கப்படும் தண்டனைகளை விசாரிப்பதற்கு, காவல் துறையினருக்கான தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும்
காவலர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், அவர்களின் பெற்றோரையும் இணைக்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.
மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி