ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

3


புதுடில்லி: ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள் ஒளிப்பரப்பாவதை தடுக்க கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெட்பிலிக்ஸ், அமேசான், ஆல்ட் பாலாஜி, எக்ஸ் தளம் (டுவிட்டர்), இன்ஸ்டாகிராம், யூடியூப், ஓ.டி.டி., சமூக வலைதளங்களில் ஆபாசக் காட்சிகள் ஒளிப்பரப்பாவதை தடுக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 28) சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:




* ஓ.டி.டி., சமூக ஊடகங்களில் ஆபாசக் காட்சிகள் ஒளிப்பரப்பாவது கவலை அளிக்கிறது.



* ஓ.டி.டி., தளங்களுக்கும் சமூகப்பொறுப்பு உள்ளது.


* ஓ.டி.டி., சமூக ஊடகங்களில் ஆபாசக்காட்சி ஒளிப்பரப்பாவதை தடுக்க தேவையான சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


* இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க கோரி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Advertisement