சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!

சென்னை: ''சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும்'' என அ.தி.மு.க.,வினர் குரல் எழுப்பினர்.
சட்டசபையில் விவாத நேரத்தின் போது, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றச்செயல்கள் அதிகரிப்பால் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் சூழல் மாறிக்கொண்டு இருக்கிறது.
பல வரலாற்று காரணங்களால் வட மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளன. தமிழகத்தை நான் வளர்ந்த மாநிலத்தோடு ஒப்பிடுகிறேன். நீங்கள் ஏன் வட மாநிலத்துடன் ஒப்பிடுகிறீர்கள்?கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேச விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். மதவாத செயல்கள் தமிழகத்தில் நடைபெறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
இது குறித்து துரைமுருகன் பேசியதாவது: அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறுகள் இருக்கும். எல்லா இடத்திலும் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது, என்றார்.
முதல்வர் பதில்
இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது உண்மைதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகள் எங்கு எப்படி உள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பா.ஜ., ஆட்சியில் பல மாநிலத்தில் என்ன நடக்கிறது?
தமிழகத்தில் மதவாத சக்திகள் இருக்கிறது என பொதுவாக கூறக்கூடாது. காஷ்மீரில் நடந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெறாது. இந்த சம்பவத்தில் மத்திய அரசுக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும்.
தமிழகத்தில் மதவாதம் ஒருபோதும் நுழையாது. தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி வராமல் இருப்பது உங்களுக்கு தெரியும். வானதி சீனிவாசன் தலைமையிடம் சொல்லி நிதியை பெற்று தர வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கு வர வேண்டிய நிதி வரவில்லை. நிதி வழங்க கோரி போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அப்பாவு பதில்
பின்னர் சபாநாயகர் அப்பாவு, '' தமிழகத்தின் மதம் சார்ந்த எந்த பிரச்னையும் கிடையாது. மதம் சார்ந்த எந்த புகார் கொடுத்தாலும், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அ.தி.மு.க., ஆதரவு குரல்!
'முன்னதாக, சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை பேச அனுமதிக்க வேண்டும் என அ.தி.மு.க.,வினர் குரல் எழுப்பினர். 'அ.தி.மு.க., பக்கம் இருந்து சத்தம் வருகிறது' என கேள்வி எழுப்பிய சபாநாயகருக்கு, '' அமைச்சர்களுக்காக சபாநாயகர் பேசும்போது, எனக்காக அ.தி.மு.க., வினர் பேசக்கூடாதா?'' என வானதி கேள்வி எழுப்பினார்.











மேலும்
-
ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதி கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
-
ஜிப்லி படம் பகிர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இடமாறுதல் செய்தது தெலுங்கானா அரசு!
-
பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
-
பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்