ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!

மாஸ்கோ: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்., 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் ரஷ்யா மற்றும் சீனா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது;
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் முன்மொழிந்துள்ளார். இந்தியா சொல்வது குறித்து அறிய ரஷ்யா மற்றும் சீனா அல்லது வேறு ஏதேனும் மேற்கத்திய நாடுகள் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும்.
பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க, பல்வேறு நாடகங்களை பாகிஸ்தான் அரசு அரங்கேற்றி வருகிறது. அதில் ஒன்றாக, சர்வதேச விசாரணை வேண்டும் என்று இப்போது கூறத் தொடங்கியுள்ளது.







மேலும்
-
அண்ணா பல்கலை. விவகாரத்தில் சார் என்று கதைவிட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்
-
உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்: அறிவித்தார் ரஷ்ய அதிபர் புடின்
-
ஆந்திராவில் கண்டெய்னர் லாரி, கார் மோதி கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
-
ஜிப்லி படம் பகிர்ந்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; இடமாறுதல் செய்தது தெலுங்கானா அரசு!
-
பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
-
பஹல்காம் சம்பவத்தை முன்வைத்து மாநில அந்தஸ்து கோர மாட்டேன்; உமர் அப்துல்லா திட்டவட்டம்