அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து உள்ளன.
டில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிதலைவர்கள் கூறியதாவது:
திரிணமுல் காங்., எம்.பி., சுதீப் பந்தோபாத்யாயா
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதித்தோம். நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளோம் என்றார்.
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
ஒட்டு மொத்த நாடும் கோபத்திலும் சோகத்திலும் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். அவர்களது முகாம்களை அழிப்பதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 22ம் தேதி தாக்குதல் நடந்த நிலையில், 20ம் தேதி பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்காமல் அந்த இடம் திறந்து விடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு குறைபாடு ஏன் நடந்தது என பதிலளிக்க வேண்டும் என்றார்.
ஏஐஎம்ஐஎம் அசாதுதீன் ஓவைஸி
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாட்டிற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
பாகிஸ்தானுக்கு எதிராக வான் மற்றும் கடல் வழியே நடவடிக்கை எடுக்க சர்வதேச சட்டங்கள் அனுமதி அளித்துள்ளன. பைசரன் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் நிறுத்தாதது ஏன்
அந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினர் செல்ல ஒரு மணி நேரம் தாமதமானது ஏன்
காஷ்மீர் மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. மதத்தை கேட்டு பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது நல்ல விஷயம். ஆனால், அந்த தண்ணீர் எங்கு தேக்கி வைக்கப்படும். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்போம் என்றார்.
பிஜூ ஜனதா தள கட்சி எம்.பி., சஸ்மித் பத்ரா
கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனமத்திய அரசிடம் கோரியுள்ளோம். நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்.
தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா
பயங்கரவாத நடவடிக்கைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனியும் பயங்கரவாதம் தொடர அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



மேலும்
-
பிரதமர் மோடி மே 3ல் சென்னை வருகை?
-
மணல் மூட்டை அடுக்கி ரவுண்டானா நெ.சா.துறையினர் சோதனை முயற்சி
-
இன்று இனிதாக.... (25.04.2025) திருவள்ளூர்
-
அகரத்தில் புது அங்கன்வாடி மையம் அமைக்க கிராமத்தினர் கோரிக்கை
-
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
-
சீமான் - பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு தந்தை, மகன் உறவு என நா.த.க., பதில்