முதியவரிடம் ரூ.29,000 பறிப்பு



சேலம்சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 65. இவர், 4 ரோடு பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் பணத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பிருந்தாவன் சாலையில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை வழிமறித்து, 29,000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement