ஹிந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

பல்லடம்; திருப்பூர் தெற்கு ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, அருள்புரத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் குரு முன்னிலை வகித்தார்.

உயிரிழந்தவர்களின் நினைவாக அனைவரும் மோட்ச தீபம் ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

பல்லடம் - என்.ஜி.ஆர்., ரோட்டில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரஞ்சித் குமார், கணேஷ், சுரேஷ் மற்றும் பா.ஜ., நகர தலைவர் பன்னீர்செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உயிரிழந்தவர்களின் நினைவாக தீப அஞ்சலி மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பல்லடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Advertisement