திருச்சி விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி:திருச்சியில் இருந்து, கோலாலம்பூருக்கு செல்ல இருந்த பயணியிடம்,16.52 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை, விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று, ஏர் ஏசியா விமான மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாரானது. அதில் செல்ல இருந்து பயணியர் மற்றும் உடமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், பயணி ஒருவர், 16 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை மறைத்து எடுத்துச் சென்றதை கண்டுபிடித்தனர். அதனை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement