கொத்தனார் தற்கொலை

புதுச்சேரி: மனைவி, பிள்ளைகள் பிரிந்த வேதனையில் கொத்தனார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்திரையர்பாளையம், காந்திதிருநல்லுார் ஓடை வீதியை சேர்ந்தவர் வேலு, 40; கொத்தனார். இவருக்கு திருமணமாகி, 3 பிள்ளைகள் உள்ளனர். வேலு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்று தனியாக வாழ்கின்றனர். இதனால் மனமுடைந்த வேலு அவரது வீட்டில் நேற்று முன்தினம் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement