தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

புதுச்சேரி: காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, நாதன் அறக்கட்டளை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி மலர் துாவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வெங்கடேசன், சுரேஷ்குமார், முருகன், நடராஜ், சத்தியா, வழக்கறிஞர் கார்த்தி, சுப்ரமணி, தரணி, விஜயராஜ், நிதிஷ், கங்கைஅமரன், கார்த்தி, வள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement