சத்தீஸ்கரில் மூன்று நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ராய்பூர் : சத்தீஸ்கர் - தெலுங்கானா எல்லையில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில், மூன்று நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் பதுங்கிஉள்ள நக்சலைட்டுகள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊடுருவியதாக தகவல் வெளியானதை அடுத்து, கடந்த 21ம் தேதி முதல், அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவத்தினர், மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை, பஸ்தார் சிறப்பு அதிரடி குழு உட்பட பல்வேறு பிரிவைச் சேர்ந்த, 10,000 வீரர்கள் நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவுக்கு நக்சல்கள் தப்பிச் செல்லக் கூடும் என்பதால், இரு மாநில எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்தது.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப் பகுதிகளில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, நக்சல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் இறந்திருக்கக் கூடும் என்பதால், அவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. அதே சமயம், தப்பியோடிய நக்சல்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே, சத்தீஸ்கரில் இருந்து தப்பிச் சென்ற நக்சல்கள் 14 பேர், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் வாரங்கல் போலீசாரிடம் நேற்று சரணடைந்தனர்.
இது குறித்து வாரங்கல் ஐ.ஜி.பி., சந்திரசேகர ரெட்டி கூறுகையில், “இரு குழுக்களை சேர்ந்த 14 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர். இந்த ஆண்டில் இதுவரை, 250 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்; 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள்,” என்றார்.
மேலும்
-
மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு; சட்டசபையில் துரைமுருகன் அறிவிப்பு
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; 32 பேர் பங்கேற்பு!
-
கோவையில் சோகம்...! நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாப பலி
-
3,935 பணியிடத்துக்கு குரூப் 4 தேர்வு அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி.,
-
காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி!
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி