பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி பள்ளியில் விருது வழங்கும் விழா

பாகூர்: பாகூர் அவர் லேடி ஆப் விக்டரி மேல்நிலைப்பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில், பள்ளி தாளாளர் ராயல் தோமினிக் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகசெந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, 2024-25ம் கல்வி ஆண்டில், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி, சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களையும், மழலையர்களுக்கு பட்டங்களையும் வழங்கிப் பேசினார்.

இதில், பெற்றோர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர், துணை முதல்வர், மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement