ரோட்டை 'பார்' ஆக மாற்றும் அவலம்

சின்னமனூர்: சின்னமனூரிலிருந்து ஊத்துப்பட்டி செல்லும் ரோட்டில் மதுப்பிரியர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பள்ளிகோட்டைபட்டி செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்குவோர் ஊத்துப்பட்டி ரோட்டில் பகலில் மரத்திற்கு அடியில் கும்பல் கும்பலாக உட்கார்ந்து மது அருந்துகின்றனர்.

இந்த ரோட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் போதையாளர்களின் ஆபாச பேச்சுக்களை கேட்டுக் கொண்டே செல்ல வேண்டி உள்ளது.

இதனால் சில சமயங்களில் மதுபோதையில் ரோட்டில் செல்வோருடன் தகராறு செய்கின்றனர். போலீசார் இப் பகுதியில் ரோந்து சென்று ரோட்டை பாராக மாற்றுவதை தடுக்க வேண்டும்.

Advertisement