வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேர் அருகே தேங்கி நிற்கும் கழிவு நீர்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேர் அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி உள்ளது.

முக்கிய திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது. தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால், கோயில், சுற்றி உள்ள பகுதிகளில் சுகாதாரமின்றி உள்ளது.

கோயில் எதிரே தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது. அப்பகுதியில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையும் கதவுகள் சேதம் அடைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

ஹிந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகள் திருவிழா துவங்கும் முன் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

Advertisement