ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக பரிசோதனை முகாம் 

திருப்பூர்; ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: ரேவதி மெடிக்கல் சென்டரில், வரும், 26 மற்றும், 27 ஆகிய தேதிகளில் சிறப்பு சிறுநீரக சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரிஷ் சிவஞானம் தலைமையில் நடைபெற உள்ள முகாமில், சர்க்கரை, சிறுநீரகம், யூரியா, கிரயேட்டினின் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சிறுநீரக சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும்.

மேலும், 1,000 ரூபாய் மதிப்புள்ள எலும்பு அடர்த்தி பரிசோதனை, இலவசமாக மேற்கொள்ளப்படும்.

சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்னை, தீவிர சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம், கை கால் வீக்கம், இதயம், கல்லீரல் பாதிப்புள்ளவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் மற்றும் தங்கள் சிறுநீரக செயல்பாடுகளை அறிந்துகொள்ள விரும்புவோர் பங்கேற்று, பயன் பெறலாம்.

முகாமில் பங்கேற்க பதிவுக்கட்டணம், 200 ரூபாய் மட்டுமே. முன்பதிவு செய்ய, 98422 09999, 98422 11116 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement