வக்ப் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு

13


புதுடில்லி: '' வக்ப் திருத்தச் சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது,'' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பி இருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தடை விதிப்பது என்பது அதிகார சமநிலை கொள்கைக்கு எதிரானது. பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பார்லிமென்டின் இரண்டு அவைகளிலும், மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.


சட்டத்தின் அரசியலமைப்பு உறுதித்தன்மையை ஆராயும் அதிகாரம் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது. அதேநேரத்தில் இந்த இடைக்கால கட்டத்தில் எந்தவொரு விதியையும் செயல்படுத்துவதற்கு எதிராக ஒரு தடை உத்தரவை பிறப்பிப்பது என்பது அதிகார சமநிலையை மீறுவதாக அமைந்துவிடும். இவ்வாறு அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Advertisement