விவசாயிகளுக்கு பயிற்சி விருதுநகர்

விருதுநகர் : அருப்புக்கோட்டை சேதுராஜபுரத்தில் கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயின்று வரும் மதுரை வேளாண் கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவி ஹர்ஷினி, முருங்கையில் மதிப்பு கூட்டுதல் என்னும் தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். அவர் கூறியதாவது: முருங்கையின் மதிப்பு கூட்டுதல் மூலம் விவசாயிகளுக்கு பல நன்மைகள் தரும்.

முருங்கை இலையை துாளாக்கி, தேநீராகவும், ஸ்மூத்திகளாகவும், உருண்டைகளாவும் மாற்றி விற்கலாம்.

முருங்கை விதைகளை சமையல் எண்ணெயாகவும், அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம், இதன் மூலம் பல விவசாயிகள் தொழில் முனைவோர்களாகி கூடுதல் வருமானம் பெறுவதற்கான பல வழிகள் உள்ளன, என்றார்.

Advertisement