கூழாங்கல் கடத்தல்: டிரைவர் கைது

பண்ருட்டி : கூழாங்கல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் போலீசார் நண்டுக்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டி.என்.49. பிஎஸ்.5949 பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 3 யூனிட் கூழாங்கல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டைச் சேர்ந்த வீரசேகர்,25; என்பவரை கைது செய்தனர்.

மேலும், தப்பியோடிய அதே பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பாலுவை தேடி வருகின்றனர்.

Advertisement