சிறப்பு பள்ளி ஆண்டு விழா

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான ரிதம் சிறப்பு பள்ளி ஆண்டு விழா நடந்தது. டிரஸ்டி கதிரேசன் வரவேற்றார். நகராட்சி தலைவர் பவித்ரா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் கமலா தேவி ஆண்டறிக்கை வாசித்தார்.

மாணவர்கள் குழு நடனம், தனி நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் வெங்கட்ரமணன் நன்றி கூறினார்.

Advertisement