போதை மாத்திரை சப்ளை கல்லுாரி மாணவர்கள் கைது

சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் நேற்று முன்தினம், வள்ளல் பாரி தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களது 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை சோதனை செய்ததில், 140 போதை மாத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. பின், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், கே.கே.நகர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா, 20, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சஞ்சய், 18, 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதில், சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் கல்லுாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா, புனேவைச் சேர்ந்தவரிடம் போதை மாத்திரை வாங்கி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

விசாரித்த போலீசார், நேற்று மூவரையும் கைது செய்தனர்.

Advertisement