பஸ் டிரைவர் தற்கொலை
போடி: போடி அருகே சுந்தரராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 42. பழனி அரசு போக்குவரத்து டிப்போவில்டிரைவராக வேலை செய்தார். இவரது மனைவி சுமதி.
இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
17 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் சுமதி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுமதி 20 நாட்களுக்கு முன்பு கணவர் மணிகண்டனிடம் விவகாரத்து கேட்டு தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிகண்டனின் தந்தை சுருளிவேல் புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாக்., வான்வெளி மூடல்; விரைவில் தீர்வு காண்போம்: மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
Advertisement
Advertisement