மணல் கடத்தியவர் கைது

புவனகிரி : பைக்கில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

மருதுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வத்துராயன்தெத்து காளிக்கோவில் அருகில், பைக்கில் சந்தேகம்படும்படி வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பைக்கில் 5 மூட்டைகளில் வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்,34; என்பவரை போலீசார் கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல்செய்தனர்.

Advertisement