பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி பலி

சென்னை, ஜாம்பஜார் பகுதியில், 80 வயது மூதாட்டி வீட்டில் தனியே வசித்து வருகிறார். கடந்த 6ம் தேதி நள்ளிரவு, மதுபோதையில் உள்ளே நுழைந்த மர்மநபர், 2,000 ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார்.

அப்போது தன்னிடம் பணம் ஏதும் இல்லை என மூதாட்டி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த போதை நபர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், கண்மூடித் தனமாக தாக்கி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த மூதாட்டிக்கு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வழக்கு பதிவு செய்த ஜாம்பஜார் போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த திருவள்ளூரைச் சேர்ந்த நாகராஜ், 40, என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, நாகராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisement