மணல் லாரி ஒன்றுக்கு ரூ.5,000 வசூல் ஆடியோவால் டி.எஸ்.பி., அதிரடி மாற்றம்

உளுந்துார்பேட்டை:மணல் லாரிகளில் வசூல் குறித்து ஆடியோ பரவியதால், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் மணல், கூழாங்கற்கள், வண்டல் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.
ஒரு வாரத்திற்கு முன், மணல் லாரி மற்றும் திருவிழாவில் ராட்டினம் இயக்க அனுமதிக்கு பணம் வாங்கியதாக உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.. அலுவலகத்தில் பணிபுரிந்த இரு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., பிரதீப், மணல், கூழாங்கற்கள் கடத்துவோரிடம் எப்படி பணம் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மணல் லாரி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் வாங்க வேண்டும்; ஒரு நாளைக்கு மூன்று முறை தான் ஓட்டுவேன் என கூறுவர்.
ஆனால், அதற்கு மேல் அதிகமாக ஓட்டுவர். மினிமம், 5,000 ரூபாய் டி.எஸ்.பி.,க்கு எனவும், உங்களுக்கு, 1,000 ரூபாய் எனவும் கேட்டு வசூலிக்க வேண்டும்' என, தனக்கு கீழ் வேலை செய்யும் போலீசாருக்கு உத்தரவிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதைத்தொடர்ந்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் விசாரணை நடத்தினார். டி.எஸ்.பி., பிரதீப்பை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
மேலும்
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..
-
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!