தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!

9


சென்னை; தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக போலீசாரின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளை காட்டிலும் 2024ம் ஆண்டில் குறைந்துள்ளது. 2022ல் 1,597 கொலைகளும், 2023ல் 1,958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024ம் ஆண்டில் 1,488ஆக குறைந்துள்ளது. குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன.

அதேவேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த 2023ல் 3,084 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 2024ல் 3,243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் 1,885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023ல் 406ஆக பதிவாகிய நிலையில், 2024ல் 471ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024ம் ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. 2022ல் 4,968 போக்சோ வழக்குகளும், 2023ல் 4,581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. இது கடந்த 2024ம் ஆண்டில், 6,929 ஆக அதிகரித்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement