மகளை பலத்தாரம் செய்த தந்தைக்கு 17 ஆண்டு சிறை

மூணாறு:13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறை, ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளா, இடுக்கி அருகே வசிக்கும் 41 வயது தொழிலாளி மனைவி வீட்டில் இல்லாதபோது 2022ல் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது பள்ளியில் படித்து வந்த அச்சிறுமி 'டியூஷன்' முடிந்து வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை என சக மாணவியிடம் கூறினார்.

அதன் காரணம் குறித்து கேட்டபோது தந்தையின் கொடூர செயல் குறித்து கூறினார். சக மாணவி பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

அவர்கள் 'சைல்டு லைன்' அமைப்பினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுமி தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு இடுக்கி பைனாவ் அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.

சிறுமியின் தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறை, ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லைஜூமோள்ஷெரீப் தீர்ப்பளித்தார்.

Advertisement