தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
சென்னை:தி.மு.க., - எம்.பி., தங்கத்தமிழ்செல்வன், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., உதயகுமார், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தேனி எம்.பி., தங்கத்தமிழ்செல்வன் மீது, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல, தேனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தரிசனம் செய்ய ஊர்வலமாக சென்றதில், நடத்தை விதிகளை மீறியதாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் மீது, உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல, அனுமதியின்றி பட்டாசு வெடித்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., உதயகுமார் மீது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன், உதயகுமார் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர், தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மூவர் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்