பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை வி.எச்.பி., வலியுறுத்தல்
சென்னை:'பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விசுவ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு இநதியாவின் சார்பில், ஆயிரம் மடங்கு அதிக வலிமையுடன் பதில் அளிக்கப்பட வேண்டும். இந்த பயங்கரவாத செயலுக்கு பதிலடியாக, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல், பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்தியது போன்ற, மத்திய அரசின் நடவடிக்கைகளை வி.எச்.பி., வரவேற்கிறது.
ஆனாலும், எல்லையை தாண்டி இருக்கும், பயங்கரவாத பயிற்சி தளங்களை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை, முடிவுக்கு கொண்டு வரவும், மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, மத்திய அரசுக்கு, தமிழக அரசு தனது முழு ஆதரவையும் வழங்க வேண்டும். பயங்கரவாத ஒழிப்பில், மத்திய அரசுடன், தமிழக அரசும், ஒரே சக்தியாக இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
-
கேரளாவுக்கு பிரதமர் சுற்றுப்பயணம்; முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
" சொன்னதை செய்யாத முதல்வர் " - அரசு டாக்டர்கள் ஆவேசம்
-
சேவையே உயிர் மூச்சாக..