பொறியாளர் பொறுப்பேற்பு

மதுரை : மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக பி.வி.பாபு பொறுப்பேற்றார். இங்கிருந்த ரூபன் சுரேஷ் ஓய்வு பெற்ற பின் காலியாக இருந்த இடத்தில், கண்காணிப்பு பொறியாளர் முகமது சபியுல்லா கூடுதல் பொறுப்பு வகித்தார்.

சில நாட்களுக்குமுன் அவர் பதவி உயர்வில் திருப்பூர் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளராக பணியாற்றிய பி.வி. பாபு, மதுரையில் நேற்று பொறுப்பேற்றார். மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement