தொழில்நுட்ப ஆய்வு கூட்டம்
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரியில் தமிழ்நாடு, புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையங்களுக்கான ஆண்டு தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் இரண்டு நாட்கள் நடந்தது.
ஐ.சி.ஏ.ஆர்., வேளாண் விரிவாக்கத்துறை முன்னாள் துணை இயக்குநர் தாஸ், புனே வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் லக்கான் சிங், ஹைதராபாத் இயக்குநர் ஷேக் மீரா வேளாண் தொழில்நுட்பங்களில் பயன்பாடு, செயல் விளக்கங்களை ஆய்வு செய்தனர். கோவை வேளாண் பல்கலை வேளாண் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் முன்னிலை வகித்தார். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரியைச் சேர்ந்த வேளாண் விரிவாக்கம் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை கல்லுாரி, சமுதாய அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். நிறைவு விழாவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் திட்டங்கள் குறித்து டில்லி வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணைச் செயலாளர் சாமுவேல் பிரவீன்குமார் பேசினார்.
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!