இணைச்செயலர் ஆய்வு

மதுரை : மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் ஆண்டு செயல்திட்ட ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் பயனடைந்துள்ள பயனாளிகளின் செயல்பாடுகளை டில்லி வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சக இணைச் செயலர் சாமுவேல் பிரவீன் குமார் ஆய்வு செய்தார். கடச்சனேந்தலில் உள்ள தேன் பதப்படுத்தும் நிலையம், நாவினிபட்டியில் உள்ள சிறுதானிய அலகை பார்வையிட்டார். வேளாண் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, வேளாண் அலுவலர்கள் சித்தார்த், மீனா உடனிருந்தனர்.

Advertisement