பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மே 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி

ராமநாதபுரம் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மே 9ல் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும், மே 10ல் கல்லுாரி மாணவர்களுக்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படவுள்ளது. இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

விண்ணப்பப் படிவம், போட்டி விதி முறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வரிடம் பரிந்துரையுடன் அவ்விண்ணப்பப் படிவங்களை tamilvalarchiramnad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மே 8க்குள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7000, 3ம் பரிசு ரூ.5000, பாராட்டுச் சான்றிதழ்களுடன் வழங்கப்படும். மே 9ல் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மே 10ல் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:00 மணிக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.

தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும். முதல் பரிசு பெறும் மாணவர் மே 17ல் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ஜூன் 3ல் நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

Advertisement