கிறிஸ்தவர்கள் மவுன ஊர்வலம்

செந்துறை : செந்துறையில் போப் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கிறிஸ்தவர்களின் மவுன ஊர்வலம் நடந்தது.

செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்சிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாதிரியார் இன்னாசிமுத்து தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போப் பிரான்சிஸ்சின் திருவுருவப்படத்தை தோளில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர். சர்ச்சில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு துக்க மணி ஒலிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ஏராளமானோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

Advertisement