ரூ.10 லட்சம் கையாடல்; ஊழியர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழநி ரோட்டில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் சின்னாளப்பட்டியை சேர்ந்த சந்திரன் 23, கணக்காளராக 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகளை மருத்துவமனை உரிமையாளரான திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ்பாபு, அவருடைய மகன் பிரணவ் சரிபார்த்தனர்.அப்போது போலி ரசீது மூலம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவு கணக்கு காட்டப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. திண்டுக்கல் வடக்கு போலீசில் பிரணவ் புகார் கொடுத்தார். விசாரணையில் போலி ரசீது மூலம் ரூ.10.5 லட்சத்தை கையாடல் செய்தது சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement