மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறை பேராசிரியர்கள் மீது இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி குழு விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் முனைவர் பி.எச்டி பட்டம் பெறுவதற்காக பதிவு செய்தார். பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அந்த இளம் பெண் உதவி பேராசிரியர், அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை கூறி புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து இளம் பெண் உதவி பேராசிரியர் கொடுத்த பாலியல் புகாரை விசாகா கமிட்டி விசாரிக்க துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டுள்ளார்.











மேலும்
-
பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
-
பாகிஸ்தானுக்கு பதிலடிக்கு தர தயாராகும் இந்தியா; மோடி தலைமையில் ஆலோசனை
-
ரூ.2,500 லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் மூவர் சிக்கினர்!
-
கல்வியை நவீனப்படுத்தும் மத்திய அரசு : பிரதமர் மோடி பெருமிதம்
-
தாயை கொன்ற வழக்கில் வாலிபர் தஷ்வந்த் விடுதலை