அகழாய்வு இடத்திற்கு செல்லும் வழியில் சீமை கருவேல மரங்கள்

சிவகாசி : வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் ரோட்டை மறைத்து சீமை கருவேல மரங்கள் நிறைந்து இருப்பதால் பார்வையிட வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகின்றது.
மேலும் ஏற்கனவே நடந்த இரு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியையும் அகழாய்வு பணிகளையும் பார்வையிடுவதற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் விருதுநகர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் பார்வையிடுவதற்கு இங்கு வருவர். இந்நிலையில் அகழாய்வு செல்லும் வழியில் ரோட்டை முழுமையாக சீமை கருவேல மரங்கள் மறைத்துள்ளது.
இதில் டூவீலரில் வருபவர்களே தட்டுத் தடுமாறி செல்ல வேண்டி உள்ளது. பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
இங்கு வேலைக்கு வருபவர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ரோட்டை மறைத்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு