ஆய்வு கூட்டம்

கடலுார் : கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில், வீட்டு வசதி துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கூடுதல் பதிவாளர் (வீட்டு வசதி) ஜான்பீட்டர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் மூலம் நகைக்கடன் வழங்கவும், கணினி மயமாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் பேபி, தனசேகரன், சுரேஷ், மாவட்ட வசூல் மேலாளர் அறிவழகன் மற்றும் சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement