பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் அதிரடி கைது
விருத்தாசலம் : பெண்ணை தாக்கி, ஆபாசமாக நடந்து கொண்ட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, வாலிபரை கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கவணையை சேர்ந்தவர் விஜய் மனைவி தமிழ்மணி, 28. அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மருதுபாண்டியன், 33, என்பவருடன் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 19ம் தேதி மாடுகளை ஓட்டிக்கொண்டு தமிழ்மணி வயலுக்கு சென்றபோது, மருதுபாண்டியன், அவரது ஆதரவாளர் வெங்கடேசன், 38, ஆகியோர் அவரை ஆபாசமாக திட்டி, ஆபாசமாக நடந்து கொண்டனர்.
இதை தட்டிக்கேட்ட தமிழ்மணி மாமனார் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் மண்வெட்டியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். தமிழ்மணி புகாரின் பேரில், மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மருதுபாண்டியனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement