கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கியது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 21நாட்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு ப்பயிற்சி முகாம் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது. மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.

முகாமில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் மே 15ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. . கடலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Advertisement