கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இந்திய கம்யூ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் சுப்பிரமணியன், சின்னசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கலியபெருமாள் முன்னிலை வகித்தனர்.

இதில் கவர்னர் ரவி, அரசியல் சாசன விரோத நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், மத்திய அரசு அவரை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement