பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்செல்வி தலைமை தாங்கினார். துறைத்தலைவர் பத்மநாபன் வரவேற்றார்.

கலைப்புல முதல்வர் அருள், முன்னாள் மாணவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.

30 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி படிப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சுடலைமுத்து, செல்வம், காந்தி, பதிவாளர் அமர்சந்த், பிச்சை, வீரக்குமார் உட்பட பலர் தங்கள் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வணிகவியல் துறை முன்னாள் தலைவர்கள் கோவிந்தராஜன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னாள் புல முதல்வர் செல்வம் நன்றி கூறினர்.

Advertisement