பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவன் கோவில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில், சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது.
இதேபோல அதேபகுதி, கமலா நேரு தெரு நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர், சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனுார், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர், தண்டலை சுயம்புநாதேஸ்வரர், ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர், அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர், ஆலத்துார் திருவாலீஸ்வரர், பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
மேலும் சின்னசேலம் பகுதியில், தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
அதே பகுதியில் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு