வருவாய்த்துறை சங்க ஆர்ப்பாட்டம்

ரிஷிவந்தியம் : வாணாபுரத்தில், தாலுகா அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், ராஜா, சரவணன், பாக்கியராஜ், பாலசுப்ரமணி தலைமை தாங்கினர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை உட்பட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்கும் வகையில் பண பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுதல், துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணி நெருக்கடி, கால அவகாசமின்றி இலக்கு நிர்ணயித்தலை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், நில அளவை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement