கஞ்சா விற்றவர் கைது

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் நபில் அகமது 25; இவர், லால்பேட்டை கைகாட்டி அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது, காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement