அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் பெங்., மாநகராட்சி அதிரடி முடிவு
பெங்களூரு : பெங்களூரில் அனுமதி பெறாமல் பேனர், பிளக்ஸ், கட் - அவுட் வைப்பவர், அச்சடித்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக விளம்பர கட்டுப்பாடு குழுவை அமைத்துள்ளது.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு மாநகராட்சி சட்டம் - 2020 செக்ஷன் 158ன் படி, கட்டடம், சுவர்கள், சாலைகள் உட்பட, பொது இடங்களில் பேனர், பிளக்ஸ், விளம்பரங்கள் பொருத்த தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நகரின் பல்வேறு இடங்களில், சட்டவிரோதமாக விளம்பரங்கள், பேனர், பிளக்ஸ்கள் வைக்கப்படுகின்றன.
சமீபத்தில் நகர் வலம் வந்த துணை முதல்வர் சிவகுமார், சாலையில் ஆங்காங்கே பிளக்ஸ், பேனர், விளம்பரங்கள் இருப்பதை கண்டு அதிருப்தி அடைந்தார். இவற்றை அப்புறப்படுத்தி, அதை பொருத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிப்பதுடன் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
இதன்படி பெங்களூரு மாநகராட்சி விதிகளை கடுமையாக்கியுள்ளது. புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பிளக்ஸ், பேனர், விளம்பரங்கள், கட் - அவுட் பொருத்த, தலைமை கமிஷனரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறுவது கட்டாயம்.
அனுமதி இல்லாமல், அச்சகத்தினர் விளம்பரம், பேனர், கட் - அவுட், பிளக்ஸ் அச்சிட தடை விதிக்கப்படுகிறது
அனுமதியின்றி அச்சடித்தால் சம்பந்தப்பட்ட அச்சகத்தினர் உரிமம் ரத்து செய்து, கிரிமினல் வழக்கு பாயும்
பிளக்ஸ், பேனர் வெளியிட்ட பிரமுகர்கள் மீதும் கிரிமினல் வழக்கு
பிளக்ஸ், பேனர், கட் - அவுட் அகற்றுவதற்கான செலவு, வட்டி மற்றும் அபராதம் சேர்த்து வசூலிக்க நடவடிக்கை
உதவி செயல் நிர்வாக பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக விளம்பர போர்டுகள் பொருத்தினால், அதே இடத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது
புதிய நெறிமுறையை செயல்படுத்த, மண்டல இணை கமிஷனர் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மண்டல கமிஷனர், தங்களின் அதிகார எல்லையில உள்ள துணை போலீஸ் கமிஷனர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும்.
போலீஸ் கமிஷனர், புதிய விளம்பர நெறிமுறைகளை, மாநகராட்சி ஒருங்கிணைப்புடன் செயல்படுத்த வேண்டும். இதற்காக பெங்களூரு நகருக்கு ஒரு நோடல் அதிகாரி, போலீஸ் நிலைய வாரியாக நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும்
மாநகராட்சி விளம்பர பிரிவு சிறப்பு கமிஷனருக்கு உதவியாக இருக்க, விளம்பர துணை கமிஷனர் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெறிமுறை சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாநகராட்சி தலைமை கமிஷனர், நகர போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்வர்
சட்டவிரோதமாக விளம்பரங்களை பொருத்துவோரை கண்காணிக்க, மார்ஷல்கள் ஒருங்கிணைப்பில், மண்டல வாரியாக ஜூனியர் இன்ஜினியர்கள் அடங்கிய விளம்பர கட்டுப்பாட்டு குழு அமைக்கப்படும்
சட்டவிரோதமாக விளம்பரங்கள் பொருத்தியவர், பேனர், பிளக்ஸ் பொருத்துவோர் மீது, போலீஸ் நிலையத்தில் இந்த குழுவினர் புகார் செய்வர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு