வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

வி.ஏ.ஓ.,க்கள் ராஜ்குமார், சிதம்பரபாரதி, சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலையான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்கும் வகையில் வருவாய்த்துறை சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement