தீவிரவாத தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம் : காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லிக்குப்பம் இஸ்லாமிய மக்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்., நகர தலைவர் ரவிக்குமார்,செயலாளர் பாரூக், வி.சி.,இஸ்லாமிய ஐக்கிய பேரவை முகமது மொய்தீன், முல்லைவேந்தன், புலிகொடியன் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி, முஸ்லிம் லீக் கட்சியினர் பங்கேற்றனர். தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, தீவிரவாத தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement